சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேர் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைதாகினர்.
அவர்களில் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் ஏனைய ஏழு பேருக்கு எதிராகவும் வீசா சட்டத்தை மீறியதாக தெரிவித்து குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மிரிஹானை வெளிநாட்டவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.