பார்வையிழப்பை தடுக்கும் உலகின் மிக விலை உயர்ந்த மருந்து

261 0

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மூலம் கண் பார்வை இழப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லக்ஸ்டுர்னா மருந்தானது கண் பார்வை இழப்பை தடுக்கும் சக்தி வாய்ந்தது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாயாகும். ஸ்பார்க் தெரப்பியடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்துள்ளது.

பரம்பரையாக ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயால் இதுவரை ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிற்கு 10-லிருந்து 20 வரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற நோய்களால் பார்வை இழக்காமல் தடுப்பதற்காக பல்வேறு மருந்துகள் உள்ளன. அவ்வகையில் தற்போது ஸ்பார்க் நிறுவனம் தயாரித்துள்ள லக்ஸ்டுர்னா உலகின் விலை உயர்ந்த கண் மருந்துகளில் ஒன்றாகும்.

இந்த மருந்திற்கு டிசம்பர் மாதம் எஃப்டிஏ அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கண்ணிற்கு மட்டும் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பயன்படுத்தப்படுகிறது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யூனிகுயர் வெளியிட்ட கிளைபெரா மருந்து 1 மில்லியன் டாலருக்கு (ரூ.6.43 கோடி) விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment