உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி: ராமதாஸ்

325 0

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. சார்பில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்ககோரி வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதற்காக லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது மொரார்ஜிதேசாய் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது.

அந்த கமிட்டி கொடுத்த பரிந்துரைதான் லோக் ஆயுக்தாவை அனைத்து மாநிலங்களிலும் தொடங்குவது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழகத்தில் இதுவரை தொடங்கப்படவில்லை. அதுபோல் பொதுமக்கள் சேவை சட்டமும் அமல்படுத்தப்படவில்லை. தகவல் பெறும் உரிமை ஆணையம் பெயரளவுக்குதான் செயல்படுகிறது.இந்த 3 அமைப்புகளும் முறையாக செயல்பட்டாலே ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

கேள்வி:-ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

பதில்:- இந்திய குடிமகன்கள் 2 பேர் ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பிக்கட்டும்.

கே:- ரஜினி ஆன்மிக அரசியல் என்கிறாரே?

ப:- இது பற்றி விளக்கம் சொல்ல அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

சினிமாவில் (ரஜினி) புகை பிடிப்பதை கைவிட்டதே எங்களுடைய வலியுறுத்தலால்தான்.

கே:- உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன?

ப:- தனித்து போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், வக்கீல் பிரிவு தலைவர் பாலு, ஈகை தயாளன், ஜெயராமன், மாவட்ட தலைவர்கள் கன்னியப்பன், ஜமுனா கேசவன், ரா.சே.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் அடையாறு வடிவேல், டி.எஸ்.மூர்த்தி, சசிக்குமார், வக்கீல் வி.எஸ்.கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment