150 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் 31-ம் தேதி தோன்ற உள்ள ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம், 77 நிமிடங்கள் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் (blue supermoon lunar eclipse) வருகிற 31-ம் தேதி தோன்றவுள்ளது. இது 2018-ம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும். இந்த நிகழ்வின் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைகொண்டிருக்கும். இதனால் மற்ற நேரங்களைவிட இந்த தருணத்தில் மிகவும் பெரிதாக காணப்படும்.
இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் எனவும், 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாலை நேரத்தில் முழு நிறைவாக இந்த கிரகணம் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிரகணத்தின் போது சந்திரன் குறித்து தெரிந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளுமாறு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews #Bluesupermoon #lunareclipse #NASA