இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் நாளை வெளிசரையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ள அதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்கவுள்ளார்.
நாடு பூராகவும் 400வது சதொச கிளையாக நாளை திறந்துவைக்கப்படும் மெகா சதொச கிளை காணப்படுகின்றது.
இதேவேளை, சுமார் 40 மெகா சதொச கிளைகளை திறந்துவைக்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.