பிரித்தானிய பிரஜை ஒருவரின் மர்ம மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் அவரது நண்பர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழுப்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று உத்தரவு பிறப்பித்தார்.
மாளிகாவத்தை, அரளிய உயன பகுதியில் ஓய்வூதிய திணைக்களத்துக்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.