மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு பிரதியீடாக ஜனாதிபதி பிரதமரிடம் இராஜினாமாக் கடிதத்தைக் கோர வேண்டும் அல்லது பிரதமர் சுயமாக முன்வந்து இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது இந்த பகிரங்க அநியாயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என வெளிநாட்டுக்கான முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் விமர்ஷகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடித்தளமான நிறுவனத்தின் தலைவர், தனது உறவினருக்கு நிறுவனத்தின் பரம ரகசியத்தை வெளிப்படுத்தி இலாபம் உழைக்க காரணமாக இருந்துள்ளார். இதற்கு உந்துதலாக முன்னாள் நிதி அமைச்சரும் செயலாற்றியுள்ளார்.
நாட்டிலுள்ள பிரதான நிதி நிறுவனமொன்றுக்கு இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக உலகில் எந்தவொரு நாட்டிலும் தான் கேள்விப்பட்டதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.