ஜனாதிபதி துரோகம் இழைத்ததாக ஐ.தே.க. கூற ஆம்பித்துள்ளது- ரெஜிநோல்ட் குரே

311 0

மத்திய வங்கியின் நிதி மோசடி தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பல்வேறு சக்திகளும் வெவ்வேறு வழிகளில் தயாராகிவருவதாக வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.

இன்று (04)கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தயவால் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறுவதற்கு சிலர் ஆரம்பித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பணம் கொடுத்து சிலரை பிரச்சாரத்துக்கு அமர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆணைக்குழு அறிக்கையை உரிய முறையில் நடைமுறைக்கு கொண்டு வந்து பொதுச் சொத்தை மீட்டெடுக்க ஊடகங்கள் ஜனாதிபதிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a comment