ஏறாவூர் – தளவாய் கரையோரப்பிரதேசத்தின் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை ஏறாவூர் பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது என்றும் குறித்த நபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தளவாய் பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிதைந்த நிலையில் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
உயரிழந்தவர் யார்? குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது குறித்த நபர் நீரோடையில் தவறி விழுந்துள்ளாரா? போன்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.