கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான அறுவைச்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.
சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பங்குபற்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் 30 வருட நிறைவைக் கொண்டாட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்தே இந்த உபகரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின்தலைவர் வைத்தியர் சயூர சமரசுந்தர, முகாமைத்துவ பணிப்பாளர் எம். சுந்தரலிங்கம், கொழுப்பு தேசிய வைத்தியசாலையின் பதில் உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் குமார விக்ரமசிங்க உட்பட வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.