தென் மாகாண விளையாட்டு, இளைஞர் விவகார, கலை, கலாசார, சமூக நலன்பேணல், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார, வீட்டுப் பொருளாதார அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணத்துறை, மனித வலு, தொழில்வாய்ப்பு அமைச்சராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.