மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உள்ளடக்கி விஷேட உரையொன்றை ஜனாதிபதி நேற்று நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது