பிணை முறி விவகாரம் குறித்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறேன்!-அஜித் பி. பெரேரா

256 0
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ஜூன மகேந்திரனது நியமனம் தவறல்ல என, ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளமை தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, பிரதமருக்கு எதிராக சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது எனவும் அஜித் பி பெரேரா மேலும் கூறியுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என இதன்போது குறிப்பிட்ட அவர், பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment