சுகாதாரம், கல்விக்காக அதிக மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது – ரணில்

303 0

தற்போதைய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் கல்விக்காக அதிக மானியங்களை ஒதுக்கியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனே அரசாங்கத்தின் முதல் நோக்கம் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாவது கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, வருங்காலத்தில் ஜேர்மனின் ஒத்துழைப்பைப் பெற்று அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment