கொலைசெய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகருக்கு பதவி உயர்வு

274 0

கண்டி அங்கும்புரை பொலிஸ் நிலையத்தில் சேவைபுறிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகர் டீ.ஆர்.எம்.மத்தும பண்டார (வயது 57), பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.

மேற்படி பொலிஸ் பரிசோதகர், கடந்த ஒக்ட்டோபர் மாதம் 30ஆம் திகதி, கடமைமுடிந்து விடு திரும்பும்போது, வழியில் இவரை இடமறித்த சிலர், கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி பரிசோதகர், கடந்த மூன்று மாதங்களாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறுதி கிரியைகள், அலவத்துகொடை பொதுமயானத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் மேற்படி பொலிஸ் அதிகாரி பதவி உயர்வுபெற்றுள்ளார். இவரது இருதி கிரியைகள் பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment