இலங்கையில் வாழும் ஆண்களில், சமபாலுறவு கொள்ளும் ஆண்கள் 7,500 பேர் உள்ளனரென, தேசிய பால்வினை நோய்கள் தடுப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்துக்கிடமான 12 இலட்சம் பேரிடம் பெற்றுக்கொண்ட இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில், எச்.ஐ.வி தொற்றுக்கு இழக்கானவர்கள் 280 பேர் உள்ளனரெனக் கண்டறியப்பட்டுள்ளதாக, அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார்.
“அவ்வாறு இனங்காணப்பட்டவர்களில், பெண்கள், கணவன் மற்றும் குழந்தைகளும் இருக்கின்றனர். அதில், கூடுதலானவர்கள் சமபாலுறவு கொள்ளும் ஆண்கள்” என வைத்தியர் தெரிவித்தார்.
“அதுமட்டுமன்றி, சிப்பிலிஸ், கொணோறியா உள்ளிட்ட இன்னும் பல பால்வினை நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களும் இனங்காணப்பட்டுள்ளர்” என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான பால்வினை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.