அ.தி.மு.க. சார்பில் நம் அம்மா நாளிதழ் ஜனவரி 17-ல் தொடங்க வாய்ப்பு

273 0

அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.அரின் பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி அல்லது ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முதல் ‘நம் அம்மா’ பத்திரிகை செயல்படத் தொடங்கும் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டி.வி.யும் செயல்பட்டு வந்தது.

தினகரன் அணியினர் நமது எம்.ஜி.ஆரையும், ஜெயா டி.வி.யையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு அதிகாரப்பூர்வ நாளேடும், டி.வி.யும் தொடங்க நேற்று நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கு “நம் அம்மா” என்றும் டி.வி.க்கு “நமது அம்மா” என்றும் பெயர் வைக்கவும் முடிவாகி உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.அரின் பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி அல்லது ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முதல் ‘நம் அம்மா’ பத்திரிகை செயல்படத் தொடங்கும் என்று அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

‘நம் அம்மா’ பத்திரிகை அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துச் சொல்வதுடன் கட்சிப் பணி விவரங்களும், நடப்பு அரசியல் நிலவரங்களும், விமர்சனங்களும் இடம் பெற்று இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பல ஆண்டு காலமாக நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ் அந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவரே ‘நம் அம்மா’ பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்.

புதிதாக நேற்று அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் பட்டியலிலும் மருது அழகுராஜ் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நமது அம்மா’ டி.வி. தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

‘நம் அம்மா’ பத்திரிகை வெளிவந்ததும் அடுத்த கட்டமாக ‘நமது அம்மா’ டி.வி.யும் செயல்பாட்டுக்கு வரும் என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment