அமைச்சரவை சட்ட முரண், ஸ்ரீ ல.சு.க. மயான அமைதி- டளஸ் எம்.பி.

342 0

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த கால எல்லை நிறைவடைந்துள்ளதனால் தற்பொழுதுள்ள அரசியல் அமைப்பின்படி அமைச்சரவையும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளும் சட்ட முரணானது என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2 வருடங்களுக்கென தேசிய அரசாங்கத்தை அமைத்தது. பின்னர் அந்த உடன்படிக்கையை 2017 டிசம்பர் 31வரை  நீடித்துக் கொண்டது. தற்பொழுது அந்த கால எல்லையும் முடிவடைந்து சில நாட்கள் ஆகின்றன. மீண்டும் கூட்டுச் சேர்வது தொடர்பில் மயான அமைதியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடைபிடித்து வருகின்றது.

இவ்வாறு செயற்படுவது அரசில் யாப்பு ரீதியில் பாரிய பிரச்சினைக்குரிய ஒன்றாகும்.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் 46 ஆவது உறுப்புரையில் அரசாங்கத்தின் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 எனவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவின் மூலம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 55 ஆகவும் இந்த நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்துக் கொண்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கைக் காலம் முடிவடைந்து விட்டால் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் 46 ஆம் உறுப்புரையே அமுலுக்கு வருகின்றது. எனவே தற்பொழுதுள்ள அரசாங்கத்தின் அமைச்சரவை சட்ட ரீதியற்றது எனவும் அசை்சர் விளக்கம் கூறியுள்ளார்.

Leave a comment