பொதுஜன பெரமுன மேடை ஏறும் ஸ்ரீ ல.சு.க.யினருக்கு தேர்தலின் பின்னர் நடவடிக்கை-துமிந்த

291 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் அரசியல் மேடையில் ஏறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் சட்டத்தை மீறுபவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்பொழுது தேர்தலுக்கே கட்சி கூடிய முக்கியத்துவத்தைக் கொடுத்து வருகின்றது. தேர்தல் முடிந்த பின்னர் இவர்கள் தொடர்பில் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment