ஹெரோய்ன் போதைப் பொருளை உடமையில் வைத்திருத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தில் நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
2010ம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து 18.24 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க கூறியுள்ளார்.
அதன்படி நீதிபதியினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.