பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் 990 கோடி ரூபா பெறுமதியான 332 கிலோவும் 500 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இந்த ஹெரோய்ன் போதைப் பொருளுடன் 29,690 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 36 பேர் வௌிநாட்டுப் பிரஜைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 29,690 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் 09 கோடி 98 இலட்சம் ரூபா பெறுமதியான 4990 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த 51,870 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே காலப்பகுதியில் கொகேய்ன் போதைப் பொருளை வைத்திருந்த 29 பேருடன், 44 இலட்சத்து 13,000 ரூபா பெறுமதியான 220 கிலோவும் 650 கிராம் நிறையுடைய கொகேய்ன் போதைப் பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை 07 இலட்சத்து 63,400 ரூபா பெறுமதியான 38 கிலோவும் 170 கிராம் நிறையுடைய ஹேசஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.