சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

272 0

கற்பிட்டி, இப்பன்தீவு கடற்பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய டிங்கி இயந்திரம், 2 தடை செய்யப்பட வலைகள், 67 கிலோ பிடிக்கப்பட்ட மீன்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் உதவி மீன்பிடித்துறை பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment