அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் செலவுகள் முகாமைத்துவம் மற்றம் மேற்பார்வை செய்யும் நோக்கில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 07ம் திகதி முதல் செயற்படும் வகையில் கொம்ப்ட்ரோலர் (Comptroller) நாயக பணியகம் ஒன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அப்பணியகத்துக்கு 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அரசாங்கத்துக்குரிய வாகனங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், அமைச்சரவையின் மூலம் அத்தகவல்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.
அதன்படி, அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களின் விபரம் :
அரசாங்கத்துக்கு உரிய வாகனங்களின் எண்ணிக்கை | 57,961 |
அவற்றில் பயன்படுத்தத்தக்க வகையில் காணப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கைமத்திய அரசாங்கம்
அரச வியாபாரங்கள் |
50,23826,732
23,506 |
அவற்றில் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கைமத்திய அரசாங்கம்
அரச வியாபாரங்கள் |
7,7235,922
1,801 |
இதேவேளை, இவற்றில் தற்போது பயன்படுத்தவதற்கு முடியாத வகையில் காணப்படுகின்ற வாகனங்களை துரித கதியில் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது