2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட ‘சொதுரு பியச’ சலுகை கடன் வழங்கல் திட்டத்தின் மூலம் 2020ம் ஆண்டளவில் கடன் பெறுநர்களின் எண்ணிக்கையினை 100,000 ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2017ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 14ம் திகதி வரையில் குறித்த கடன் யோசனை முறையின் கீழ் 3,354 கடன் பெறுநர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இத்தொகையினை மேலும் அதிகரிப்பதற்காக குறைந்த வருமானம் பெறுகின்ற நபர்களின் வீடுகளின் பரப்பளவினை 750 சதுர அடியிலிருந்து 1,000 சதுர அடி வரை உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.