உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஈழத்தமிழ் இளைஞர்கள் மூவர்!

313 0

புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை ஈட்டி தாய் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்துவருகின்றார்கள். 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கனடாவில் வசிக்கின்ற ஈழத்தமிழர் இளைஞர்கள் மூவர் கனேடிய அணி சார்பில் போட்டியில் ஈடுபட இருக்கின்றனர்.

இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் குறித்த இளைஞர்கள் விளையாடவுள்ளதாக தெரியவருகிறது.

காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர்.

காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும் ஏரன் பத்தமநாதன் சிறந்த விக்கெட் காப்பாளராகவும் செயல்பட்டு கனேடிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இந்த போட்டியில் முதல் கட்டமாக கனடா அணியோடு இங்கிலாந்து பங்காளதேசம் மற்றும் நமிபியா அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment