அரசிற்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பினரால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்? – அமைச்சர் ரிஷாட்

997 9

ஒவ்வொரு தேர்தல்களிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற புதிய தேர்தல் திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவை அளித்து எவ்வாறு தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கில் பரந்துபட்டு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே சிறந்த தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Leave a comment