கொழும்பு துறைமுக நகருக்கு ரணில் விஜயம்

444 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

நேற்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார்.

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தைப் பார்வையிட்ட பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

குறித்த விஜயத்தில் மேல்மாகாண  மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்சா டி சில்வா உட்பட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment