போதையை இல்லாதொழிப்பதற்காக அரச தலைவர் என்ற ரீதியில் முன்னெடுத்த சேவையைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
போதைக்கு எதிரான அரச சார்பற்ற அமைப்பின் சர்வதேச சம்மேளனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
40 உலக நாடுகளைச் சேர்ந்த 87 அரச சார்பற்ற அமைப்புக்களின் பங்கு பற்றலுடன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம் திகதி சீனாவின் மெகோவில் வழங்கப்பட்ட இவ்விருதானது இன்றைய தினம் (2) ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டது.
போதைக்கு எதிரான அமைப்பின் ஒன்றியத்தின் தலைவர் சரத் எம். சமரகேவினால் குறித்த விருது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.