பிச்சையெடுக்க முடியாது….நாள் ஒன்றுக்கு 1500 ரூபா வீதம் தொழில் வாய்ப்பு!!

634 0

கொழும்பு நகரில் யாசகம் செய்வோருக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபா சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.கடந்த முதலாம் திகதி தொடக்கம் கொழும்பு நகரில் யாசகம் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் யாசகம் செய்து வந்தவர்கள் நாள் ஒன்றுக்கு 1500 ரூபா சம்பாதிக்கக் கூடிய வகையில் தாழ்நில அபிவிருத்தி சபையின் ஊடாக தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன.இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாசகம் செய்வோரின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் நலத் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.கொழும்பு நகரில் சுமார் 600 யாசகர்கள் யாசகம் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டம் கட்டமாக இந்த யாசர்கள் கொழும்பு நகரிலிருந்து அகற்றப்படவிருக்கிறார்கள்.உடல் ஊனம் காரணமாக தொழில்களில் ஈடுபட முடியாதவர்களுக்கு மாற்றுத் திட்டங்களின் ஊடாக நலன்கள் வழங்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment