விண்வெளியில் சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி

28527 0

விண்வெளியில் கண்டறியப்பட்ட நுண்ணுயிரியை முதல்முதலாக விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்திலேயே சோதனை செய்து உறுதி செய்துள்ளனர்.

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி நிலையம், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல் முறையாக நுண்ணுயிரியை விண்வெளியிலேயே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர். இது வரை விண்வெளியில் கிடைக்கும் நுண்ணுயிரியை பூமிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்த பிறகே உறுதிப்படுத்துவர். ஆனால் இந்த உயிரை விண்வெளியிலேயே சோதனை செய்து உறுதி செய்தனர்.

மின்யான் கருவிகளை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அதன் மாதிரிகள் பூமிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.

Leave a comment