கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ சிகரெட் பெட்டி ஏலம்

1331 2

கியூபா முன்னாள் அதிபர் பிடல்காஸ்ட்ரோவின் கையெழுத்திட்ட சிகரெட் பெட்டி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கியூபா நாட்டின் புரட்சி வீரரான முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. இவர் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் இவர் பயன்படுத்திய மர சிகரெட் பெட்டி அமெரிக்காவில் ஏலம் விடப்படுகிறது.

அந்த பெட்டி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரினிடாட் சிகரெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கியூபா நாட்டு முத்திரையுடன் இந்த சிகரெட் பெட்டி உள்ளது. அதில் பிடல் காஸ்ட்ரோ சேகரித்து வைத்த 24 சிகரெட்டுகள் உள்ளன.

சிகரெட் பெட்டியில் பிடல் காஸ்ட்ரோவின் கையெழுத்து உள்ளது. இது பாஸ்டன் நகரை சேர்ந்த பெண் கொடைவள்ளல் ஈவா ஹார்லர் என்பவருக்கு பிடல் காஸ்ட்ரோ பரிசாக வழங்கியது. இத்தகவலை அவர் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் இப்பெட்டியில் நீங்கள் கையெழுத்திடுங்கள். அப்போது தான் இதை நான் அதிக விலைக்கு ஏலத்தில் விற்க முடியும் என கேலியாக கூறினேன். உடனே அதில் அவர் கையெழுத்து போட்டுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment