விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

445 0

இடம்பெற்று முந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்தார்.

வினாத்தாள் திருத்தும் பணிகள் இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

அதன்படி இன்று 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முதல்கட்ட வினாத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முதல்கட்ட வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறும் 57 பாடசாலைகளினது முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment