எனது புகைப்படம் பொதுஜன முன்னணிக்கே உரித்து- மஹிந்த

369 0

தேர்தலில் வாக்குக் கேட்க எல்லோருக்கும் தன்னுடைய புகைப்படம் தேவையாகவுள்ளதாகவும், விரும்புபவர்கள் தன்டைய புகைப்படத்தைப் பயன்படுத்த முடியும் எனவும், இருப்பினும், பொதுஜன முன்னணிக்கே தனது புகைப்படம் உரித்துடையது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மலர் மொட்டுக்கு வாக்களிக்கும் அனைவரும் இந்த அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்பதுவே கருத்தாகும்.

நாட்டை ஒழுங்காக கொண்டுநடாத்த முடியாதவர்கள் கிராமத்தின் நிருவாகத்தை ஒப்படைக்குமாறு கோருவது வேடிக்கையானது எனவும் அவர் கூறினார்.

நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்தில்  வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

Leave a comment