டுபாய், சவுதி- வெளிநாட்டவர்களிடமிருந்து வற் வரி அறவிட தீர்மானம்

274 0

டுபாய் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களுக்கு இவ்வருடம் 01 ஆம் திகதி முதல் முதல் முறையாக வற் வரி செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டுபாய் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 வீத வற் வரி அறவிடப்படவுள்ளது. இந்த வரி அந்நாடுகளிலுள்ள சகல வெளிநாட்டவர்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது.

வரியற்ற நாடுகளாக நீண்ட காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வந்த டுபாய் மற்றும் சவுதி நாடுகளில் இலங்கை தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உள்ளனர்.

இந்த வற் வரி எரிபொருள், உணவு, புடைவை, மின்சாரம், நீர் மற்றும் வாடகை அறை என்பவற்றுக்காக அறவிடப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வற் வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது. இதேவேளை, டுபாயில் அதிவேகப் பாதையில் பயணிப்பதற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் சுமார் 3 லட்சம் இலங்கையர்களும், சவுதியில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் இலங்கையர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment