மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் எடுக்கப்பட இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதி இன்று (3) ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (02) தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட 17 பாரிய லஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு ஆணைக்குழுவின் அறிக்கையும் நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலும் ஜனாதிபதி இன்றைய அறிவிப்பில் கருத்துத் தெரிவிப்பார் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.