கருணாநிதியை இன்று ரஜினி சந்திக்கிறார்

346 0

ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார்.

தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரஜினி மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அங்கு சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். அப்போது கருணாநிதியிடம், ரஜினி உடல்நலம் விசாரிக்கிறார். ஆங்கில புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.

புதுக்கட்சி தொடங்கும் நிலையில் ரஜினி, கருணாநிதியை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a comment