பேரு நாட்டின் பசமாயோ பிரதேச பனிச்சரிவு பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான பாதையினூடாக சென்ற குறித்த பஸ் வண்டி பனிச்சரிவில் தடம்புரண்டு கடற்கரை பகுதியில் வீழ்ந்துள்ளது.
விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் விபத்து ஏற்படும் வேளையில் குறித்த பஸ் வண்டியில் 50 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெவில்ஸ் பென்ட் என்றழைக்கப்படும் வளைவுப் பகுதியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.