296 இந்திய மீனவர்கள் விடுதலை

319 0

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 380 இந்திய மீனவர்களில், கடந்த வருடத்தில் 296 பேர் சட்டமா அதிபரின் பணிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் இவ்வருடம் 84 பேர் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் 75 இந்திய மீனவர்களும், 2011 ஆம் ஆண்டில் 80 இந்திய மீனவர்களும், 2012 ஆம் ஆண்டில் 189 இந்திய மீனவர்களும், 2013 ஆம் ஆண்டில் 92 இந்திய மீனவர்களும், 2014 ஆம் ஆண்டில் 115 இந்திய மீனவர்களும், 2015 ஆம் ஆண்டில் 219 இந்திய மீனவர்களும், 2016 ஆம் ஆண்டில் 277 இந்திய மீனவர்களும், 2017 ஆம் ஆண்டில் 380 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment