ஐக்கிய தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் இன்று கொழும்பில் ஒன்று கூடவுள்ளனர்.
கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஆசன ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட முகாமையாளர்கள் கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடவுள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெற செய்வதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது