மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஷேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்றைய தினம் விஷேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டமொன்று இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டதிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பை மேட்கொள்ளவுள்ளார்.