அதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது – மஹிந்த

2236 9

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக சில அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தனது புகைப்படங்களை பயன்படுத்துவதை தான் நன்கு அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு தனது எதிர்ப்பை தான் இதுவரை வௌிப்படுத்தவில்லை எனவும் மஹிந்த கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், தனது படங்களை பயன்படுத்துவோர், தேர்தல் சட்டத்தை மீறினால் அதற்கான பொறுப்பை தன்னால் ஏற்க முடியாது எனவும் அவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment