வடமாகாண அரச பஸ் ஊழியர்கள் முன்னெடுத்திருக்கும் வேலை நிறுத்தம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பஸ் நிலையத்தை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே வடமாகாண அரச பஸ் ஊழியர்கள் குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் 7 டிபோ நிலையங்களின் ஊழியர்கள் குறித்த வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.