கொழும்பு மாநகர சபை தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை

291 0

கொழும்பு மாநகர சபையின் தேர்தலை பிற்போடுமாறு தேசிய மக்கள் கட்சியினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் மூலம் குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை சட்டரீதியற்றது எனவும் வேட்புமனுவை மீளவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு வழங்கும் வரை தேர்தலை பிற்போட வேண்டும் எனவும் தேசிய மக்கள் கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment