நாட்டுக்கு தரம் குறைந்த பால்மாவை இறக்குமதி செய்யும் பால் மா நிறுவனங்களுக்கு எதிராக ஒருவார காலத்திற்குள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்தார்.
அம்பெவேல கால்நடை பண்னைக்கு அமைச்சர் விஜயம் செய்த அவர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டுக்கு தேவையான பால் மாவை மாத்திரம் இறக்குமதி செய்யவும் பால் மா தொழிற்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிரீம் யோக்கட் ஆகியவற்றுக்கான தரம் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் பாலின் பாவனை 20 சதவீதமாக இருந்தது. தற்போது இது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.