புதிய வீடுகள் கட்டப்படுமா?: சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி

337 0

201609011450061606_MK-stalin-question-for-TN-Assembly-damaged-house_SECVPFகொளத்தூர் தொகுதியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டப்படுமா? என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.  சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-
கொளத்தூர் தொகுதியில் ராஜாதோட்டம் பகுதிகளில் உள்ள 84 குடிசை மாற்று வாரிய வீடுகள், ஜமாலியா லைனில் 128 வீடுகள், கவுரமங்கலத்தில் 448 வீடுகள், 40 ஆண்டு காலத்துக்கு மேல் ஆகியுள்ளதால் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. எனவே, இப்பகுதியில் பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டித்தரப்படுமா? என்றார்.

இதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில், அந்த பகுதி வீடுகளை ஆய்வு செய்து நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதே போல் துறைமுகம் தொகுதி கிளைவ் பேட்டரி அருகில் உள்ள பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டப்படுமா? என்று சேகர் பாபு (தி.மு.க.) கேட்டார்.

அதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இந்த குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதி தன்மையை கண்டறிய தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும். குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப சேதமடைந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை மீண்டும் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.