பச்சை நிறத்தில் இருந்த இறைச்சி: நுகர்வோர் குழப்பம்

239 0
புத்தாண்டு தினமான நேற்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளில் இருந்த கோழி இறைச்சியின் நிறம் பச்சையாக காணப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று போயா மற்றும் புதுவருடம் என்பதால், தம்புள்ளை பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் விடுப்பில் இருந்தமையால், மக்களுக்கு முறைப்பாடு செய்வதில் சிரமங்கள் காணப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த உணவுப் பொதியுடன் சம்பந்தப்பட்ட சிற்றூண்டிச்சாலைக்கு சென்று வினவினோம்.

இதற்கு பதிலளித்த அவர்கள், குறித்த சிற்றூண்டிச்சாலையில் இடம்பெற்ற தவறொன்றினாலேயே இது இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பச்சை நிற மரக்கறிகளுக்கு ஒரு சுவையூட்டியும், இறைச்சி போன்றவற்றுக்கு பிறிதொரு சுவையூட்டியும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், மரக்கறிகளுக்கு பயப்படுத்தப்படும் சுவையூட்டு தவறுதாலக குறித்த இறைச்சியில் போடப்பட்டமையே இந்த நிறமாற்றத்துக்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற செயற்கை சுவையூட்டிகள் வர்த்தக நிலையங்களில் கிடைப்பதாகவும், அனைத்து ஹோட்டல்கள் மற்றும் சிற்றூண்டிசாலைகளிலும் இவை பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட அக் கடையின் உரிமையாளர், இது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவது அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment