ஒருதொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் மிரிஹான – கல்வல வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் வசம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைதானவர் 63 வயதான அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அவரை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.