தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: சுஷ்மா சுவராஜ்

494 0

பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை விவகாரம் தொடர்பான பாராளுமன்ற ஆலோசனை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இணை மந்திரி எம்.ஜே.அக்பர், வெளியுறவு துறை செயலர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளாதவரை, அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave a comment