டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை வாங்கினால் பரிமாற்ற கட்டணம் இல்லை

320 0

டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை வாங்கினால் பரிமாற்ற கட்டணம் இல்லை என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிமாற்ற கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி டெபிட் கார்டு, பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டணம் செலுத்துதலுக்கு ரூ.2 ஆயிரம் வரை பரிமாற்ற கட்டணம் கிடையாது.

இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இது 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்

Leave a comment