கேப்பாபுலவில் மக்களின் வழிபாட்டில் தலையிடும் இராணுவம்!

532 7

கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் 28ஆம் திகதி  மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, கேப்பாபுலவு பகுதியில்  111.5 ஏக்கர்  காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக  133.34 ஏக்கர்  காணிகள் கையளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் இன்று சென்றுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில், இன்று இராணுவ ஏற்பாட்டில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு ஒன்று இடம்பெற்றது.

Leave a comment